• Aug 22 2025

பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த "ஹவுஸ் புல் 5".! 10 நாட்களில் இத்தனை கோடி வசூலா.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஜூன் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தான் "ஹவுஸ் புல் 5". இது ஒரு காமெடி படம் மட்டும் அல்ல, சிரிப்பு, ஸ்டைல் மற்றும் ‘மாஸ்’ வேடிக்கைகளின் கூட்டிணைவு. 


அக்சய் குமாருடன் ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனம் பாஜ்வா மற்றும்  ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட 24 நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், வெளிவந்த முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

தருண் மன்சூகானி இயக்கத்தில், சஜித் நதியாத்வாலா தயாரித்துள்ள இந்தப் படம்,  ஆக்ஷன் கலந்த Entertainer ஆக உருவாகியுள்ளது. அத்தகைய படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.24 கோடி வசூல் செய்து, 2025ம் ஆண்டில் அதிகளவு வசூல் செய்த மூன்றாவது படம் என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்தது. 


தற்பொழுது தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் ரூ.212.76 கோடி வசூலித்துள்ளது. இதனால் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் #Housefull5 என்ற ஹாஷ்டாக்கை வைரலாக்க ஆரம்பித்துள்ளனர்.


Advertisement

Advertisement