தமிழ் சினிமாவில் ஸ்டைல், ஹீரோயிசம், பாரம்பரியம் என்பவற்றுள் பாக்யராஜ் மட்டுமே முன்னிலையில் உள்ளார். அத்துடன் சினிமாவிலும், திரைப்பட விளம்பரத் தயாரிப்பிலும் பாக்யராஜ் தனது தனித்துவமான நடிப்பை முன்னிறுத்தியிருந்தார். இந்நிலையில், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து சமீபத்தில் ஒரு பேட்டியில், பாக்யராஜ் பற்றிய சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

அதன் போது, “பாக்யராஜ் படங்களில எல்லாம் டைட்டில் கார்ட்ல அவரோட பெயர் வரும் இடம் மக்கள் எல்லாரும் கைதட்டுவாங்கன்னு கரெக்டா அந்த இடத்தில போடுவாரு. அதுவும் அந்த சீன் அவரை கலாய்க்கிற மாதிரியான சீனாத் தான் இருக்கும். படத்தில அவர முன்னிறுத்தவே மாட்டார். திரைக்கதையை தான் அவர் முன்னிறுத்துவார்.” என்று கூறியிருந்தார் பச்சமுத்து.
எல்லா சினிமாக்களிலும் ஹீரோவின் திறனைப் பாராட்டும் காட்சி முக்கியத்துவம் பெறும். பாக்யராஜ் படங்களில் நகைச்சுவை மட்டுமே மையமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசன் பச்சமுத்து தென்னிந்தியாவின் மிகச் சிறந்த இயக்குநர். இவர் “லப்பர் பந்து” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அத்தகைய இயக்குநர் தற்போது பாக்யராஜ் குறித்து பல கருத்துகளை முன்வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!