• Dec 21 2024

நயன்தாராவின் உயிர்கள்! துபாய்க்கு ஒரு குட்டி ரிப்! வைரல் போட்டோஸ் இதோ...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது குடும்பத்துடன் துபாய் சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் தனது இரண்டு மகன்களின் புகைப்படத்தை பதிவு செய்து எனது உயிர்கள் என்று குறிப்பிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய இரண்டு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது தனது குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்து வரும் விக்னேஷ் சிவன் துபாய்க்கு குடும்பத்துடன் ஜாலி டூர் சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.


குறிப்பாக அவர் துபாயில் எடுத்த தனது இரண்டு மகன்களின் புகைப்படத்தை பதிவு செய்து நயன்தாராவுக்கும் அதை டேக் செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ‘எனது உயிர்கள்’ என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நயன்தாராவின் மகன்கள் உயிர் மற்றும் உலகம் இருவரும் நன்றாக வளர்ந்து விட்டார்கள் என ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.









Advertisement

Advertisement