• Jan 19 2025

ராமமூர்த்தி இறந்த பின்னும் அசிங்கப்படுத்திய கோபி.. பரபரப்பான ப்ரோமோ

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களிள் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இல்லத்தரசிகள் முதல்இளம்  ரசிகர்களை கவர்ந்த ஒன்றாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் பாக்கியலட்சுமி தனது ரெஸ்டாரண்டில் இராமமூர்த்தியின்  புகைப்படத்தை வைத்து மாலை போட்டு வழங்குகின்றார். மேலும் தனக்கு ஊக்கம் கொடுத்து தன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது எனது மாமா தான் என்று அவருடைய பெருமையைப் பற்றி பேசுகின்றார்.


அந்த நேரத்தில் அங்கு வந்த கோபி தான் தனது பிள்ளைகளுக்கு சிறந்த அப்பாவாக உள்ளேன். ஆனால் எனது அப்பா எனக்கு நல்ல அப்பாவாக இருந்ததே கிடையாது என பூகம்பம் ஒன்றை கிளப்பியுள்ளார். இதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.

அதன் பின்பு கோபி வெளியே  போக பாக்கியா அவரை நிறுத்தி நீங்க உங்க பிள்ளைகளுக்கு நல்ல அப்பா என்று சொன்னதை நான் கடைசி மட்டும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் என்று கோபிக்கு செருப்படி கொடுக்கிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement