• Dec 21 2024

விடுதலை-2! வெறியாட்டம் ஆடும் விஜய் சேதுபதி! அனல் பறக்கும் டுவிட்டர் விமர்சனம்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், பவானி ஸ்ரீ, கெளதம் மேனன் மற்றும் ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியான விடுதலை-2 திரைப்படம் எப்படி இருக்கிறது, டுவிட்டர் வாசிகள் திரைப்படம் குறித்து என்ன சொல்கிறார்கள், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம் வாங்க.  


விடுதலை ஒன்றில் கான்ஸ்டபிள் குமரேசன் போலீஸ் படையாலே பிடிக்க முடியாத பெருமாள் வாத்தியாரை தனியாளாக ஒரு சின்ன டீமுடன் போராடி பிடித்துக் கொடுப்பதுடன் முதல் பாகம் முடிந்திருக்கும். இதன் அடுத்த பாகம் யார் இந்த பெருமாள் வாத்தியார்? அவரின் கதையின் பின்னணி என்ன என்பதை எடுத்து காட்டுவதுதான் விடுதலை-2.


இந்நிலையில் டுவிட்டர் வாசிகள் விடுதலை குறித்து தமது பதிவினை டுவிட்டரில் போட்டு வருகிறார்கள். விஜய் சேதுபதியின் இன்னொரு முகத்தை விடுதலை 2 படத்தின் மூலம் பார்க்கலாம். மனுஷன் அந்தளவுக்கு நடிப்பில் மிரட்டியிருக்காரு. வெற்றிமாறனுக்கு மீண்டும் ஒரு தேசிய விருது படமாக விடுதலை 2 அமையும் என்று பலவாறான டுவிட்டர் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. 


Advertisement

Advertisement