தங்கக்கடத்தல் தொடர்பாக நடிகை ரன்யா ராவ் மீது சமீபத்தில் குற்றச்சாட்டு ஒன்று எழுந்திருந்தது. தற்பொழுது இது தொடர்பாக ரன்யா தனது அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதில் ரன்யா கூறியதாவது, பொய்யான வழக்கில் தன்னை அதிகாரிகள் சிக்கவைத்ததுடன் தன்னை அடித்துத் துன்புறுத்தி கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும் குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளார்.
மிகப்பெரிய சர்ச்சையாக பரவிய இந்த சம்பவம், திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தங்கக்கடத்தல் வழக்கில் தன்னை உண்மையில்லாமல் சிக்கவைக்க முயன்றுள்ளனர் என்று கூறிய நடிகை, "நான் தங்கக்கடத்தல் செய்யவே இல்லை. ஆனால் அதிகாரிகள் என்னை அடித்து துன்புறுத்தி, பொய்யாக எழுதக் கட்டாயப்படுத்தினர்" என்று கூறியுள்ளார்.
சமீபத்தில், விமான நிலையத்தில் தனி வழிப்பரிசோதனையின் போது ரன்யா ராவ் மீது சந்தேகம் எழுந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனால் சுங்கத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்ததோடு, தங்கம் கடத்தியதாக குற்றமும் சாட்டினர்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ரன்யா ராவ் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். தன் மீது எந்தக் குற்றமும் இல்லை என்றதுடன் உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல் தன்னை துன்புறுத்தியுள்ளனர் என்றும் கூறியுள்ளார். இந்தத் தகவல் தற்பொழுது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!