இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமாரின் புதிய ஹிந்தி திரைப்படம் பற்றிய தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில் படக்குழு இதற்கான படப்பிடிப்பு பணிகள் பற்றி தீவிரமாக கதைத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ஷூட்டிங் 10 மாதங்கள் கழித்து தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அக்ஷய் குமார், அதிரடி மற்றும் விறுவிறுப்பான கதைகளுக்கு பெற்றவர். சமீப காலமாக பல்வேறு கதைக்களத்தில் நடித்து வருவதுடன் இப்போது, ஒரு புதிய முயற்சியாக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஹிந்திப் படம் ஒன்றினை உருவாக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படம் அவரின் நீண்ட காலத்திற்குப் பிறகு உருவாகும் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், இது பெரும் ப்ளாக்பஸ்டர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் அக்ஷய் குமாரின் இயக்கத்தில் உருவாகும் சூப்பர் ஹிட் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதற்கு ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Listen News!