கடந்த வாரம் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் பேரிடர் தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இதில் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மனச்சோர்வு நிலவி வருகிறது.
இந்த நிகழ்வின் பின்னணியில்,த.வெ.க தலைவர் தளபதி விஜய், தனது சுயநலமற்ற மனிதநேயம் மூலம் அனைவரது மனங்களையும் வருடுகிறார். இன்று வெளியாகிய தகவலின்படி, இரண்டாவது நாளாக தொடர்ச்சியாக,உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் வீடியோ கால் மூலமாக பேசி விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
கரூரில் த.வெ.க சார்பில் நடைபெற்றிருந்த அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு கூட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஏற்பட்ட அதீத நெரிசல், கட்டுப்பாடுகளை மீறிய மக்கள் தொகை, பாதுகாப்பு குறைபாடுகள் என பல காரணங்களால், கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் சிலர் உயிரிழந்தார்கள்.
இந்த நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் துயரத்தைப் புரிந்து கொண்ட விஜய், நேரில் சென்று சந்திப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றாலும், வீடியோ காலில் நேரடியாக பேசும் வழியைத் தேர்ந்தெடுத்து கதைத்துள்ளார்.
இரண்டாவது நாளாக, 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் விஜய் வீடியோ காலில் பேசி உள்ளார். அவர்களின் துயரக் கதைகளை நேரடியாக கேட்டுக் கொண்டு உணர்வுபூர்வமாக பதிலும் அளித்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!