• Oct 09 2025

அடடே! இது ரொம்ப புதுசா இருக்கே.! வேட்டுவம் மூலம் புது உலகத்தைக் காட்டவிருக்கும் பா.ரஞ்சித்

subiththira / 15 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான பாணியில் படங்களை இயக்கி வரும் இயக்குநர் பா.ரஞ்சித், தனது புதிய திரைப்படமான "வேட்டுவம்" மூலம் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறார். சமீபத்தில் வந்த தகவலின் படி, இந்த திரைப்படம் ஒரு Science Fiction படமாக உருவாகி வருகிறது என்ற அப்டேட்டை பா.ரஞ்சித் நேரடியாக உறுதிப்படுத்தியுள்ளார்.


இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான தினேஷ், ஆர்யா, மற்றும் சோபிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை அமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றுகிறார். இப்படம் ரசிகர்களிடம் ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கும் படங்கள் என்றாலே சமூக நீதியை மையமாகக் கொண்ட கதை சொல்லலாகவே இருக்கும். ஆனால் "வேட்டுவம்" படம், அந்த வழக்கமான பாணியைத் தாண்டி, ஒரு புது உலகத்தை உருவாக்கும் முயற்சியாக இருக்கப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Advertisement

Advertisement