• Jan 19 2025

பிக் பாஸ் பிரபலத்தின் மனைவியா இது! "ஜோஷ்வா இமைபோல் காக்க" நடிகையின் குடும்பம் இதோ...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

ஜோஷ்வா இமைபோல் காக்க திரைப்படம் கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. ஐசரி கே. கணேஷ் தயாரித்திருந்த இப்படத்தில் வருண் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தின் கதாநாயகியாக அறிமுக நடிகை ராஹி என்பவர் நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் பிரபலத்தின் மனைவி என செய்தி வலம் வருகிறது.


திரையரங்கில் வெளிவந்து ஜோஷ்வா இமைபோல் காக்க திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறவில்லை. ஆக்ஷன் காட்சிகளை தவிர படத்தில் ஒன்றுமே இல்லை என பலரும் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள்.


ஜோஷ்வா படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராஹி, கடந்த 2020ஆம் ஆண்டு ஆரவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிக் பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டு டைட்டில் அடித்த நடிகர் ஆரவ்வை தான் நடிகை ராஹி திருமணம் செய்தார்.


இவர்கள் இருவருடைய திருமணமும் கொரோனா காலகட்டத்தில் நடந்தது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பலரும், குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு, திருமண தம்பதியை வாழ்த்தினார்கள்.


இந்த அழகிய ஜோடிக்கு தற்போது தற்போது ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஆரவ் தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அது வில்லன் கதாபாத்திரம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சினிமா துறையில் அறிமுக நாயகியாக அடியெடுத்து வைத்துள்ளார்.

Advertisement

Advertisement