தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்படும் முன்னணி திரைப்படங்களில் ‘பராசக்தி’ முக்கியமானது. ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இதுவரை படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற நிலையில், தற்போது இலங்கையில் படப்பிடிப்பினைத் தொடங்கியுள்ளதாக தகவலாக வெளியாகியுள்ளது.
இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எதிராக நடிகர் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்கும் அதர்வா இதில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். முக்கியமாக, தென்னிந்தியாவின் சிறந்த நடிகை ஸ்ரீலீலாவும் இதில் நடித்துவருகிறார். இவர் இதுவரை தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் மட்டுமே நடித்திருந்தார். தற்போது ‘பராசக்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிகளவு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது வரையிலும் ‘பராசக்தி’ படத்தின் முக்கியமான பகுதிகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டன. எனினும் இப்படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் சில முக்கியமான காட்சிகள் இலங்கையில் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தன. அந்த வகையில், படக்குழு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு புறப்பட்டு வந்து தற்போது அங்கு படப்பிடிப்பினை நடத்தி வருகிறது. இலங்கையின் கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் முக்கிய இடங்களில் இன்று படப்பிடிப்புகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!