பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகா வீட்டுக்கு வந்தது பிடிக்காமல் ஈஸ்வரி சண்டை போட்டுக் கொண்டிருக்க, கோபி நெஞ்சை பிடித்துக் கொண்டு வலிப்பதாக நடிக்கின்றார். இதனால் தான் எதுவுமே கேட்க மாட்டேன் என்று ஈஸ்வரி ஒதுங்கி விடுகின்றார்.
இதன்போது கிச்சனில் உள்ள பாக்யாவிடம் ஜெனி அங்கிளுக்கு நிஜமாகவே நெஞ்சுவலியா என்று கேட்க, இல்லை அவர் நடிக்கின்றார் என்று சொல்லுகின்றார். அதன் பிறகு அங்கு வந்த ராதிகா, நாங்க இங்க வந்திருக்கக் கூடாது.. அவருக்கே இந்த வீட்டில் உரிமை இல்லை.. அப்படி இருக்க நாங்களும் வந்து கஷ்டப்படுத்துறோம் என்று சொல்ல, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று பாக்கியா சொல்லுகின்றார்.
மேலும் அங்கு இருந்த செல்வி, கோபி சார் இங்கேயும்.. நீங்க அங்கேயும் இருந்து கஷ்டப்படுறது அக்காவால பார்க்க முடியல.. நீங்க வந்தது அக்காவுக்கு சந்தோஷம் தான் என்று சொல்லுகின்றார். அதன் பின்பு செழியன் கம்ப்யூட்டரில் ரெஸ்டாரண்டுக்கு தேவையான லிஸ்டை பாக்கியாவுக்கு எடுத்து கொடுத்து உதவி செய்து கொண்டிருக்கின்றார்.
இதன் போது அங்கு வந்த ஈஸ்வரி லிஸ்ட் போடாமலேயே தேவையில்லாத வேலை எல்லாம் உங்க அம்மா பண்ணுறா.. இதில் லிஸ்ட் போடுகிறாயா என்று கேட்கிறார்.
அதன்பின் அங்கு வந்த கோபி, நான் மட்டும் ராதிகாவை பார்க்க போகல என்றால் விபரீதமா என்னென்னவோ நடந்து இருக்கும்.. இப்பயும் ராதிகாவும் மையூவும் வந்தப்ப நீ எதுவும் பேசல என்று பாக்யாவுடன் கதைக்கின்றார்.
அதற்கு பாக்கியா, நீங்களும் உங்க பொண்டாட்டி குழந்தையும் இங்கே இருக்கிறது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. இவங்களும் உங்க உடம்ப பார்த்து பயப்படுறாங்க.. அதனால தான் நான் இந்த முடிவு எடுத்தேன்.. ஆனால் நீங்கள் தங்க வேண்டுமென்றால் வாடகை கொடுக்கணும் என்று சொல்லி ஒரு நாளைக்கு 1300 கேட்கின்றார்.. அதற்கு சரியான தலையாட்டி செல்கின்றார் கோபி.
இதை பார்த்த ஈஸ்வரி வாடகையை ராதிகா கிட்ட வாங்க வேண்டியது தானே என்று பேச, இந்த வீட்டை நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கினேன் என்று எனக்குத் தெரியும். யார்கிட்ட வாங்கணும் என்று உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்ல, ஈஸ்வரி எதுவும் பேசாமல் செல்லுகின்றார்.
அதன் பின்பு ராதிகா மேலே தங்குவதற்கு கோபியின் சாமான்களை எல்லாம் எடுக்கப் போக ஈஸ்வரி தடுக்கின்றார். மேலும் அவனுக்கு உடம்பு சரியில்லை அவன் கீழே இருக்கட்டும் என்று சொல்ல, அந்த நேரத்தில் கோபியும் வந்து விடுகின்றார். இதனால் ராதிகா எதுவும் சொல்லாமல் சாமான்களை மேலே எடுத்துச் செல்கின்றார்.
இறுதியாக இனியாவிடம் மயூவை உன்னுடன் தூங்க வைக்குமாறு கோபி கேட்க, அவர் பாக்கியாவை மாட்டி விடுகின்றார். அதற்கு பாக்கியா நான் மையூவுடன் படுக்கின்றேன் என்று சொல்லுகின்றார். அதன் பின்பு மையூ தூங்கும் போது தங்களை இங்கு தங்க வைத்ததற்காக பாக்கியாவுக்கு நன்றி சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!