விடுதலை 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் KS. ரவிக்குமார் படையப்பா பார்ட் 2வில் நீலாம்பரி இவங்க தான் என்று கூறிய விடையம் தற்போது வைரலாகி வருகிறது. இதனை கேட்ட ரசிகர்களும் அப்போ படையப்பா-2 இருக்கா என்று ஆவலாக கேட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் விடுதலை 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட KS. ரவிக்குமார் நடிகை மஞ்சுவாரியரிடம் திரைப்படங்களில் ஹீரோயினியாகத்தான் நடிப்பீங்களா இல்ல நல்ல கதையில் முக்கியமான ரோல் இருந்தா நடிப்பீர்களா? என்று கேட்டார் அதற்க்கு மஞ்சுவாரியர் "இல்ல சார் அப்படினு இல்ல எனக்கு முக்கியமான ரோல் கிடைத்தால் நான் கட்டாயம் செய்வேன் என்று கூறினார்.
அதற்கு KS. ரவிக்குமார் அப்போ படையப்பா படம் எப்படி என்று கேட்ட உடனே மஞ்சுவாரியர்"நீலாம்பரி மாதிரி ஒரு ரோல் கிடைச்சா போதும் எனக்கு இப்போ நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையா இருக்கு" என்று கூறியுள்ளார். இதனை கேட்ட KS.ரவிக்குமார் அப்போ "படையப்பா பாகம் 2ல் நீங்கதான் நீலாம்பரி, ஆனா ரம்யா- நீலாம்பரி அடுத்த ஜென்மத்துல பழிவாங்குவேன்னு சொன்னாங்க இப்ப ஜெய்லர் படத்துல ரஜனிக்கு புதினா சட்னி ஊத்திட்டு இருக்காங்க அப்ப படையப்பா எடுக்குறது கஷ்ட்டம் தான் என்று கூறினார். இதனை கேட்ட அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
அப்போது குறுக்கிட்ட நடிகர் விஜய் சேதுபதி "அதே நீலாம்பரி வரணும்னு இல்லையே சார் நீங்க எழுதுறதுதான் கதை எடுத்துங்க சார்" என்று சொல்கிறார். அதற்கு KS ரவிக்குமார் "அவர்களும் வாய்ப்பு கிடைச்சால் எடுப்போம்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகவே ரசிகர்கள் படையப்பா -2 குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Listen News!