அநேகமான ரசிகர்களின் மனதை கவர்ந்த காட்டூன் திரைப்படம் முபாஸா. இதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக இருக்கிறது இந்நிலையில் இதன் கதாபாத்திரங்களுக்கு வாய்ஸ் கொடுத்த ஹீரோக்கள் தொடர்பான வீடியோ ஒன்றை டிஸ்னி ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது. அது தொடர்பாக பார்க்கலாம்.
த லயன் கிங் திரைப்படம் தமிழ் மக்களுக்கு அவ்வளவு ஃபேவரைட் திரைப்படமாக மாறிவிட்டது. சிம்பா, டிமன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களையும் கார்டூன் வடிவிலிருந்து பலரும் ரசித்து வருகிறார்கள். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வடிவில் 2019-ம் ஆண்டு `தி லயன் கிங்' அனிமேஷன் திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தான் அடுத்த பாகத்தில் இதில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கு தமிழ் நடிகர்கள் குரல் கொடுத்துள்ளனர். இந்த பாகத்தில் முஃபாசாவுக்கு அர்ஜூன் தாஸ் குரல் கொடுத்திருக்கிறார். இதைத் தாண்டி ஸ்காருக்கு அசோக் செல்வனும், கிராஸுக்கு நாசரும், ரஃபிகி (இளமை) கதாபாத்திரத்திற்கு வி.டி.வி. கணேஷும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
இதைத் தாண்டி வழக்கம்போல பலருக்கும் பிடித்தமான அதே டிமன் மற்றும் பூம்பா கதாபாத்திரத்திற்கு சிங்கம் புலியும், ரோபோ ஷங்கரும் குரல் கொடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோவில் ரோபோ சங்கர் "டே டிமு நாங்களும் போய் இந்த காட்டை ஆளலாம்" என்று கேட்கிறார். அதற்கு சிங்கம்புலி "பூம்பா பூம்பா நாங்க காட்டை ஆள பொறந்தவங்க இல்ல கவலை இல்லாமல் வாழ பொறந்தவங்க" என்று சொல்கிறார் இது வீடியோவில் மேலும் சுவாரஷ்யத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர் வரும் 20ம் திகதி வெளியாக இருக்கிறது.
Listen News!