• Jan 19 2025

விஜயாவுக்கு வந்த பேராசை.. தூபம் காட்டிய ரோகிணி! இடையில் வந்த போலீஸ்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , பிஏவை முத்து விரட்டி கொண்டு செல்ல, அங்கு பொலிசாரும் வந்து விடுகின்றார்கள். இதனால் அங்கு வந்த போலீசார் பிஏவை பிடித்துக் கொண்டு போக, அதனை போட்டோ எடுத்து ரோகிணிக்கு அனுப்புகிறார் சிட்டி.

மறுபக்கம் மனோஜ், ரோகிணியும் சாப்பிட்டு கொண்டு இருக்க, சிட்டி அனுப்பிய மெசேஜ் வந்ததை பார்க்க முடியாமல் ரோகிணி இருக்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் முத்து ஒரு விதத்தில் கொடுத்து வச்சவன். நல்லா சமைச்சு கொடுக்கிற பொண்டாட்டி கிடைச்சிருக்கு என்று சொல்லுகிறார். அவர் போனதும் சிட்டி  அனுப்பிய போட்டோவை பார்த்து சந்தோஷப்படுகிறார்.

இதைத்தொடர்ந்து விஜயா வீட்டில் வேலை செய்து கொண்டிருக்க அங்கு பார்வதி வருகின்றார். அந்த நேரத்தில் மீனாவுக்கு வழமை போல திட்டிய விஜயா, வீட்டு வாசலில் கடை இருக்கும்போது வீட்டையும் பார்த்து வேலையும் பாத்துட்டு இருந்தா.. நான் தான் சும்மா கார்ப்ரேட் கம்பெனிக்கு கால் பண்ணி அதையும் கெடுத்துவிட்டேன் என உணருகிறார். இதனால் பார்வதி அதை நீ தான் செய்தியா என்று அதிர்ச்சி அடைகிறார்.


அதன்பின்பு மீனாவின் கஸ்டமர் ஒருவர் பூக்கடைக்கு வர, அவரிடம் பாய்ந்து விழுகிறார் விஜயா. இதனால் கோபத்தில் இருந்த விஜயா மீனா வந்ததும் பார்த்துக்கிறேன் என்று இருக்கிறார். அந்த நேரத்தில் மீனா வந்ததும் மீனாவுக்கு வாசலில் வைத்து திட்டுகிறார்.

இதை தொடர்ந்து நானும் வீட்டில் இருக்கிறதால தானே இப்படி செய்றீங்க.. நாளைக்கு நான் பார்லருக்கு வாரேன் என ரோகிணிக்கு சொல்ல, ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் பேசாமல் நீங்க பரதநாட்டிய அகாடமி ஒன்று ஆரம்பிங்க என்று விஜயாவுக்கு ஆசை காட்டுகிறார். விஜயாவும்  அந்த ஆசையில் மயங்கி இருக்கின்றார்.

இதைத்தொடர்ந்து ரோகிணி விஜயாவுக்கு பரதநாட்டியதற்கான காஸ்டியூம் எல்லாம் வாங்கி கொடுக்க, விஜயா அதை போட்டு வருவதற்காக கதவை பூட்டி உள்ளே செல்கிறார். மேலும் வீட்டிற்கு எல்லாரையும் வருமாறு போன் பண்ணி அழைக்கின்றார். அதன்படி எல்லாரும் யாருக்கு என்னாச்சு என விழுந்து அடித்து வருகின்றார்கள். ஆனாலும் அம்மா தான் வர சொன்னா அவங்களை பார்க்க தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் என்று மீனா சொல்லுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement