• Jan 19 2025

பாக்கியாவுக்கு திடீரென கிப்ட் கொடுத்த கோபி! ராதிகா கொடுத்த ஐடியா? பாக்கியலட்சுமி சீரியலில் இன்று..!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பாக்கியா, ஜெனி, செழியன் வாழ்க்கையை நினைத்து வருந்துகிறார். ஆனாலும் செழியன், நாளைக்கு ரெஸ்டாரண்ட் ஓப்பிங்க வேலையை பார்ப்போம் என சமாதானம் செய்கிறார்.

மறுபக்கம் வீட்டில் எல்லாரும் செழியனுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் வீட்டுக்கு சென்ற செழியன், ஜெனி இன்டைக்கு கோர்ட்டுக்கு வரல, அதனால கேஸ்ஸை தள்ளி வச்சிட்டாங்க என சொல்கிறார். 


இதை தொடர்ந்து ரெஸ்டாரண்ட் பத்தி பேசிக் கொண்டு இருக்க, மினிஸ்டருக்கு மாலை எல்லாம் வாங்கணும் என பாக்கியா சொல்ல, இதைக் கேட்டு கோபி நல்லா பல்பு வாங்க போற என உள்ளுக்குள் பேசிக் கொள்கிறார். அத்துடன் மினிஸ்டரின் பிஎ க்கு போன் பண்ணி, மினிஸ்டர் கட்டாயம் ஸ்கூல் பங்கசனுக்கு வருவா தானே என கன்போம் பண்ணுகிறார்.

இதை அடுத்து எல்லாரும் ரெஸ்டாரண்ட் ஒப்பிங்க்கு ரெடியாக, ராமமூர்த்தி, ஈஸ்வரி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். இதை எல்லாம் பார்த்து கோபி நல்லா மொக்க வாங்க போறா என பேசிக் கொள்கிறார்.

அத்துடன், எல்லோரும் ரெஸ்டாரன்ட் ஓப்பனிங்க்கு கிளம்பிச் செல்ல, போ.. பாக்கியா உனக்கு பெரிய கிப்ட் வச்சிருக்கேன். அதாவது பெரிய ஆப்பு வைத்திருக்கிறேன் என கோபி சொல்லி மகிழ்கிறார்.

அதன்பின், ராதிகா கோபியிடம் அடுத்த பிளான் என்ன என கேட்க, கோபி சமாளிக்கிறார். ஆனாலும்,  ராதிகா லோன் ஒன்று போட்டிருப்பதாகவும், அது கிடைத்தவுடன் அதை வைத்து புதிய பிசினஸ் ஆரம்பிக்குமாறு கோபிக்கு சொல்கிறார். அவருக்கு நம்பிக்கை கொடுத்து நீங்க பெரிய பிசினஸ்மேனா வரணும் என சொல்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement