• Jan 19 2025

பொண்டாட்டி கூட வாழ தெரியலை.. ’பெண் சக்தி’ பாட்டு தேவையா? தனுஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நேற்று தனது சமூக வலைதளத்தில்பெண் சக்திஎன்ற பாடலை வெளியிட்டு மகளிர் தினத்திற்கு வாழ்த்து கூறிய நிலையில் மனைவியை வைத்து வாழ தெரியாமல் பிரிந்துவிட்ட உங்களுக்குபெண் சக்திஎல்லாம் தேவைதானா என்று கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் திடீரென இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்த பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ரஜினி ரசிகர்கள் இந்த பிரிவை ஏற்றுக்கொள்ளவில்லை. என்ன இருந்தாலும் தனுஷ், தனது மனைவியை பிரிந்து இருக்க கூடாது என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் குடும்ப அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் நேற்று தனது சமூக வலைதளத்தில் பாடகி ஸ்வேதா மோகன் பாடிய மகளிர் சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். ‘பெண் சக்திஎன்ற பாடல் பாடலை தனது சமூக வலைதளத்தில் வெளியிடுவதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

பெண்களின் முன்னேற்றத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த பாடலை பாடகி ஸ்வேதா மோகன் கம்போஸ் செய்து பாடியுள்ளார் என்பதும் கிருத்திகா நெல்சன் என்பவர் இந்த பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் தனுஷ் இந்த பாடலை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை அடுத்து சில கண்டனங்கள் மட்டும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் ரஜினி பொண்ணை நீங்கள் பிரிந்திருக்காமல் இருந்திருக்கலாம் என்றும் முடிந்தால் மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement