• Nov 13 2025

உயிர் நண்பனை விட்டுக்கொடுக்காத கவின்! பழைய புகைப்படத்துடன் நெகிழவைக்கும் பதிவு ! எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டிங்களே பிரதீப்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதில் முக்கிய போட்டியாளராக பிரதீப் என்பவர் பங்கு பற்றி வருகின்றார். இவர் நடிகர் கவினின் நெருங்கிய நண்பன் என்பதும் யாவரும் அறிந்ததே. கவினின் டாடா படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சூப்பராக விளையாடி வந்தார். இதனால் இவர் தான் டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தனர்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழிக்கு ஏற்ப, ஓவராக பிக்பாஸ் வீட்டில் பொல்யூட் செய்து விளையாடியதால்,  ஒரேயடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் பிரபல  நடிகரான கவின் தன்னுடைய இணையதள பக்கத்தில்  'உன்னை அறிந்தவர்கள் எப்போதும் உன்னை பற்றி  அறிவார்' என பதிவிட்டு பிரதீப்புடன் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டிருக்கிறார்.


மேலும் பிரதீப் செய்தது தப்பாகவே இருந்தாலும் ஒரு எச்சரிகை செய்திருக்கலாம். அல்லது மஞ்சள் கார்டு கொடுத்திருக்கலாம். என சமூக வலைத்தள பக்கங்களில் பிரதீப்க்கு சார்பாக உரிமைக்குரல் ஒன்று ஓங்குகின்றது.

அதுமட்டுமில்லாமல் பிரதீப் வெளியே வந்ததற்கு முக்கிய காரணமாக இருந்த மாயா, பூர்ணிமா, ஜோவிகாவையும் கிழித்து வருகின்றனர். எனினும் பிரதீப் செய்த காரியங்கள் முற்றிலும் தவறானவை என்பது நிதற்சனமே..




 






 




Advertisement

Advertisement