• Jan 18 2025

வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை- கவினைத் தொடர்ந்து பிரதீப்புக்கு ஆதராக பேசிய சினேகன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனும் முதல் வாரத்தில் இருந்தே பல்வேறு அனல்பறக்கும் விவாதங்கள் மற்றும் சண்டைகளோடு சென்று கொண்டிருக்கிறது. 

இந்த சீசனில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிக்க போட்டியாளராக பிரதீப் இருந்து வந்தார். தற்போது அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது தான் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் இரண்டாவது போட்டியாளர் பிரதீப். இதற்கு முன் மகத் அடிதடியில் இறங்கியதற்காக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். 

அதையடுத்து தற்போது பிரதீப், பெண்களிடம் முகம் சுளிக்கும் வகையில் பேசியதற்காகவும், அவரால் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறியும் அவரை அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி உள்ளார் கமல்ஹாசன்.

இதனால் இவரது உயிர் நண்பனான கவின் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து கவிஞர் சினேகனும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


அதில் "நீ பார்க்காத ரணங்களும் இல்லை... நீ பார்க்காத வலிகளும் இல்லை... பிரதீப்... இதுவும் கடந்துபோகும். வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை.... வெளியே கிடக்கு வா... @TheDhaadiBoy" என ட்வீட் போட்டுள்ளார்.

உன்னை பற்றி தெரிந்தவர்களுக்கு நீ யாரென்று தெரியும் நண்பா என சபரி மலைக்கு செல்லும் போது பிரதீப் உடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு கவினும் தனது நண்பனுக்கு முழு ஆதரவை அளித்துள்ளார். ஹாஷ்டேக் டிரெண்டிங்கில் பிரதீப் ஆண்டனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement