• Jan 19 2025

கவின், மணிகண்டனை பற்றி புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர்! வைரலாகும் ட்விட்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும்நடிகர்களின் பட்டியலில் கவின் மற்றும் மணிகண்டன் காணப்படுகின்றார்கள். இவர்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்ததாகவும் எமோஷனலாக வைப்பதாகவும் காணப்படுகின்றது.

ஜெயம் ரவி, விஷால், சிவகார்த்திகேயன், சிம்பு, விஜய் சேதுபதி, தனுஷ் ஆகிய நடிகர்கள் இளம் நடிகர்களின் ஸ்டேஜை தாண்டி தற்போது சீனியர் ஆகிவிட்டார்கள். இதனால் தற்போது மணிகண்டன் கவின் ஆகியோர் இளம் நடிகராக களம் இறங்கி உள்ளார்கள்.

இந்த நிலையில், பிரபல இயக்குனர் செல்வராகவன் வெற்றி தோல்வி சினிமாவில் மாறிவரும். ஆனால் சிறந்த நடிகர்களாக ரசிகர்களை கவினும் மணிகண்டனும் கவர்ந்து விட்டார்கள். அவர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று அவர்களை பாராட்டி  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் செல்வராகவன்.


மேலும் அவர் கூறுகையில், இருவருமே சிறந்த நடிகர்கள். இதில் சிறப்பு என்னவென்றால் இருவரும் யதார்த்தமாகவும் உண்மைக்கு மிக நெருக்கமாகவும் நடித்து வருகின்றார்கள். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் ஏற்று நடிக்கும் திறமை இவர்களுக்கு உண்டு. இவர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.

இவ்வாறு இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து இப்படி ஒரு வாழ்த்து கிடைத்த நிலையில், அதற்கு எந்தளவுக்கு உண்மையா இருக்க முடியுமா அந்த அளவுக்கு உண்மையா இருப்பேன் ரொம்ப நன்றி சார் என்று கவின் பதிவிட்டுள்ளார். அதேபோல மணிகண்டனும் பூரித்து போய் நன்றி தெரிவித்துள்ளார் தற்போது இந்த பதிவுகள் வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement