• Nov 23 2025

காந்தாரா பட நடிகர் மாரடைப்பால் மரணம்.. படக்குழுவினர் செய்த காரியம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த 2022 ஆம் ஆண்டு  ரிஷப் ஷெட்டி  இயக்கி, நடித்த காந்தாரா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.  கர்நாடக மாநிலத்தின் மலைப்பகுதிகளில் நடக்கும் பழங்கால நம்பிக்கைகளையும், சடங்குகளையும் மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. 

இந்த படத்தின் தனித்துவமான கதை,  நடிகர்களின் நடிப்புத் திறனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இதனால் இதன் இரண்டாம் பாகத்திற்கும்  மிகப்பெரிய எதிர்பார்ப்பு  காணப்பட்டது.  

இதை தொடர்ந்து 'காந்தாரா சாப்டர் 1' படம் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. சுமார் 140 கோடி  பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், இதுவரை உலகளவில் 340 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. 


காந்தாரா சாப்டர் 1 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து  அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் ராகேஷ் பூஜாரி. 

இவர் காந்தாரா படப்பிடிப்பு முடிந்து 20 நாட்களுக்குப் பின் மாரடைப்பால் இறந்துள்ளார். இவருடைய மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் படத்தின் துவக்கத்தில் படக்குழு இரங்கல் தெரிவித்து இவருடைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.




Advertisement

Advertisement