சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா, சீதா, அவருடைய அம்மாவுடன் கோவிலுக்கு வெளியே வரும்போது அங்கு பூக்கடையை கொண்டு வந்து வைக்கின்றார்கள். இதன்போது அதை உங்களுடைய மருமகன் தான் மீட்டெடுத்தார் என்று சொல்ல, உடனே சீதா அதை அருண்தான் பண்ணினார் என்று சொல்லுகின்றார்.
அதன் பின்பு அருணுக்கு போன் பண்ணி தேங்க்ஸ் சொல்லுகின்றார். சீதாவின் அம்மாவும் மீனாவும் அவருக்கு நன்றி சொல்கின்றார்கள்..அதன் பின்பு தன்னுடைய வண்டி காணாமல் போன விஷயத்தையும் தன்னுடைய அம்மாவிடம் சொல்லுகின்றார் மீனா.
இதை தொடர்ந்து மீனா பூ கொடுத்து விட்டு வரும் வழியில் க்ரிஷை சந்திக்கின்றார். அங்கு அவருடன் காருக்குள் இருந்த ரோகிணி, மீனாவை பார்த்ததும் ஓடி ஒளிந்து கொள்கிறார்.
இன்னொரு பக்கம் சிந்தாமணியின் காரை தூக்கி அவருடைய வாயாலயே உண்மையை எடுக்கிறார் முத்து. அதன் பின்பு வண்டியை தூக்கி இடத்திற்கு சென்று பார்த்தல் அவர்கள் அந்த வண்டியை பீகாருக்கு அனுப்பியதாகவும் இனிமேல் அதனை எடுக்க முடியாது என்றும் சொல்கின்றனர்.
இதனால் வண்டியை தூக்க சிந்தாமணி கொடுத்த 20 ஆயிரம் ரூபாயுடன் நீங்க10,000 தர வேண்டும். மீதி பணத்தை சிந்தாமணியை எடுத்து வரச் சொல்லு, இல்லையென்றால் போலீஸுக்கு போவேன் என முத்து மிரட்டுகிறார்.
அதன்படி சிந்தாமணிக்கு போன் பண்ணி நடந்த சம்பவத்தை சொல்லி 40 ஆயிரத்தை எடுத்து வருமாறு சொல்லுகின்றனர்.
இதனால் சிந்தாமணி ரோகிணிக்கு போன் போட்டு, உன்னுடைய பெயர் வெளியே வரக்கூடாது என்றால் நீதான் அந்த 40 ஆயிரம் ரூபாயை தர வேண்டும் என்று ரோகிணியை மிரட்டுகின்றார். இதான் இன்றைய எபிசோட்.
Listen News!