• Oct 13 2024

எப்போ திருமணம்? பிரியங்கா சொன்ன பதில்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் நானி தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பை பெற்றவர். இவர் நான்- ஈ என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.தேவதாஸ், ஜெர்சி, அடடே சுந்தரா, தசரா, ஹாய் நான்னா போன்ற படங்கள் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். தற்போது சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.


இவருடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் நடித்துள்ளனர். இந்த படத்தை டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் - 29 வெளிவர உள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து கேள்வி எழுந்த நிலையில், நடிகை பிரியங்கா மோகன் கூறிய விஷயமும் வைரலாகி வருகிறது. இதில் எப்போது திருமணம் என பிரியா மோகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இப்போதுள்ள பேச்சுலர் வாழ்க்கை மகிழ்ச்சியாக அனுபவித்துவிட்டு, சரியான நபரை சந்திக்கும் பொழுது கண்டிப்பாக அவரை நான் திருமணம் செய்துகொள்வேன் என பிரியங்கா கூறியுள்ளார்.

Advertisement