• Jan 18 2025

5 நாட்கள் வசூல் வேட்டையில் டிமான்டி காலனி 2... வசூல் விபரம்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

டிமான்டி காலனி 2 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 5 நாட்கள் கடந்த நிலையில் இந்த படத்தின் வசூல் விபரம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்துடன் இரண்டாம் பாகத்தை இணைத்த விதமே படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்தது. இரட்டை வேடத்தில் நடித்து அருள்நிதி அசத்தியிருந்தார். 


மேலும் பிரியா பவானி ஷங்கர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வந்த கடுமையான விமர்சனங்களும் டிமான்டி காலனி 2 வெற்றியின் மூலம் தகர்த்தெறியப்பட்டது.இந்த நிலையில், 5 நாட்களை கடந்துள்ள டிமான்டி காலனி 2 திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 23 கோடி வரை வசூல் செய்துள்ளது. 

Advertisement

Advertisement