தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளராக ஆரம்பித்து, இன்று தமிழக அரசியலில் முக்கியமான தலைவராக உயர்ந்துள்ளவர் உதயநிதி ஸ்டாலின். நடிகர்–தயாரிப்பாளர் என இரட்டை பொறுப்பு வகித்த காலத்தில் அவர் தயாரித்த திரைப்படங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன.

இதற்கு சமீபத்தில் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தொடங்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ், இன்று தமிழ் சினிமாவின் சிறந்த தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. அந்த நிறுவனத்தின் பெயரை பலருக்கும் பரவலாக அறிமுகப்படுத்தியது நடிகர் விஜய் நடித்த "குருவி" (2008) திரைப்படம் தான்.

இந்நிலையில் பிஸ்மி பேட்டியின் போது, “உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற ஒரு நிறுவனம் விஜயின் "குருவி" படத்துக்குப் பிறகு தான் பலருக்குத் தெரியும். உதயநிதி ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனம் "குருவி" படத்தின் மூலமே பலரின் கவனத்தைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து அவர்கள் தயாரித்த படங்கள் மூலம் அடைந்த வளர்ச்சியும் தான் இன்று உதயநிதியை ஒரு முக்கிய அரசியல் தலைவராக நிலைநிறுத்தியுள்ளது. எனவே உதயநிதிக்கு அடையாளம் கொடுத்தவர் விஜய் தான்." எனக் கூறியுள்ளார்.
அந்த காலத்தில் விஜய் நடித்த படங்களுக்கு இருந்த ரசிகர்களின் ஆதரவு, அந்த படத்தின் தயாரிப்பாளர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இந்தக் காரணத்தால் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனம் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நிறுவனமாக திகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!