சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக் பாஸ் காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஆனது ஒன்பது சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இம்முறை 20 போட்டியாளர்கள் நேரடியாகவும் நான்கு போட்டியாளர்கள் வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலமும் உள்ளே வந்தனர்.
அதில் நந்தினி தானாகவே வெளியேற, தொடர்ந்து பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் குமார், திவாகர், மற்றும் இறுதியாக கெமி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் வெளியேற்றப்பட்ட ஆதிரை மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் உள்ளே வர உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது ஆதிரை, எஃப்ஜே இருவரும் பேசு பொருளாக காணப்பட்டனர். அதிலும் ஆதிரை எஃப்ஜே உடன் காட்டிய நெருக்கம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆரம்பத்தில் ஆதிரை ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது கடுமையாக காணப்பட்டார். இவர் இறுதிவரை முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் நாளடைவில் அவருடைய கவனம் சிதறியது. ஆதிரை எஃப்ஜே ஆகிய இவரும் பண்ணிய அலப்பறைகளால் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஆதிரை வெளியேறினார். தற்போது எஃப்ஜே வியானாவுடன் நெருக்கம் காட்டி வருகின்றார்.
எனவே, ஆதிரையை உள்ளே விட்டால் நிச்சயமாக எஃப்ஜே சிக்கலில் மாட்டுவார். இந்த நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். ஒரு பக்கம் ஆதிரை மறுபக்கம் வியானா என எஃப்ஜே நடுவில் சிக்கப் போகின்றார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .
Listen News!