தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான மூன்றாவது திரைப்படம் தான் டியூட். இதில் அவருக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடித்துள்ளார். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் கலக்கியுள்ளார்.
டியூட் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கீர்த்திஸ்வரன். இவருடைய முதல் படமே ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கின்றது. இவர் கமர்ஷியல் ரூட்டில் மக்களுக்கு தேவையான மெசேஜை சிம்பிளாக எடுத்துச் சொல்லியுள்ளார்.
மேலும் டியூட் படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர், டியூட் படத்தின் கதை தற்போது விவாத பொருளாக மாறி உள்ளது. இந்த படத்தில் சொல்லாத விஷயத்தை சொன்னதாக சொல்லுகின்றார்கள். ஆனால் இது தமிழ்நாடு. இந்த படத்தில் பேசி இருக்கும் விஷயங்கள் தமிழ்நாட்டில் இதுவரை பேசாத கருத்துக்கள் இல்லை..

எங்களுக்கு முன்பே நிறைய பேர் இதை சொல்லி இருக்கின்றார்கள். அடுத்த தலைமுறையான நாங்களும் அதை பேசுவோம்.. என்னுடைய அடுத்தடுத்த படைப்புகளிலும் இதே மாதிரி தான் என்னுடைய கருத்துக்களை பேசுவேன். ஆணவ கொலை தொடர்பான வசனம் முதலில் படத்தில் இல்லை. அப்போது கவின் படுகொலை நடந்தது . அந்த நேரத்தில் இது பற்றி ஒரு வசனம் வைக்க வேண்டும் என்று பிரதீப் சொன்னார் என்றார்.
இந்த நிலையில், டியூட் திரைப்படம் ஐந்து நாட்களில் உலக அளவில் 95 கோடி வசூலித்து இருப்பதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. தற்போது இந்த படமும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைவது உறுதியாகிவிட்டது.
இதைத்தொடர்ந்து டியூட் திரைப்படம் ஆறாவது நாளில் 3.75 கோடி வசூலில் பெற்றுள்ளதாகவும், இந்தியாவில் ஆக மொத்தம் 54.05 கோடிகளை வாரிக் குவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Listen News!