சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து மீனாவின் அம்மாவை சீதா வீட்டிற்கு போகுமாறு சொல்லுகின்றார். இதனால் கோவப்பட்ட மீனா வெளியே வர, அம்மா இப்ப சீதா வீட்டுக்கு போனா தான் நல்லது. அதனால சீதாவின் கோவமும் குறையும்.. அம்மாவும் நல்லா ரெஸ்ட் எடுப்பாங்க என்று முத்து சொல்கின்றார்.
இதை தொடர்ந்து சீதா ஆபீஸில் 5 லட்சம் பணத்துடன் பேங்குக்கு போக, திடீரென செக்யூரிட்டிக்கு வீட்டில் இருந்து போன் வருகின்றது. இதனால் அவர் அழுது புலம்ப நானே போயிட்டு வாரேன் என்று சீதா தனியாக செல்லுகின்றார்.
அந்த நேரத்தில் சீதா கொண்டு சென்ற பணத்தை வழிமறைத்த திருடர்கள் அதை பறித்துச் செல்கின்றார்கள். இதனால் சீதா வீதியில் நின்று அழுது புலம்ப, அங்கு மீனா வருகின்றார். என்ன நடந்தது என்று விசாரிக்கவும் சீதா பதில் சொல்லாமல் அழுது கொண்டிருக்க, ஆட்டோ டிரைவர் நடந்தவற்றை சொல்லுகின்றார்.

இன்னொரு பக்கம் மீனா கால் வலி என்று சொல்ல, விஜயா வழமை போல அவரிடம் வேலை வாங்குகின்றார். ஆனாலும் முத்து நீ எதுவும் செய்ய வேண்டாம் என்று அவரை அமர சொல்லிவிட்டு அவர் வேலை செய்கின்றார்.
இறுதியில் சீதா ஹாஸ்பிடலில் நடந்தவற்றைச் சொல்ல, இதை நீங்கள் வேண்டுமென்று தான் செய்தீர்களா? என்று சீதாவை திட்டியதோடு அவரை வேலையை விட்டுப் போகுமாறு கூறுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!