தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சும்மா 39 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்ட சபை தேர்தலை மையமாகக் கொண்டு கடந்த 13ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் விஜய். அவர் அன்றைய தினமே திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களை சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்தார். நேற்று நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் செய்தார். நேற்று காலை 8. 45 மணிக்கு நாமக்கல் கே. எஸ் திரையரங்கத்தின் அருகே விஜய்க்கு பேச அனுமதி கொடுக்கப்பட்டது.
ஆனால் இவர் நாமக்கல்லுக்கு மதியம் 2:45க்கு தான் சென்றார். அவரை பார்ப்பதற்காக தொண்டர்களும் ரசிகர்களும் காலையிலிருந்து சாப்பிடாமல் பலர் காத்திருந்துள்ளனர். இதனால் பெண்கள் உட்பட பலர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இறுதியில் 3. 45 மணிபோல் கரூர் புறப்பட்டு சென்றுள்ளார் விஜய். வழி நெடுகலும் உள்ள கூட்டத்தை கடந்து செல்லவே அவருக்கு மாலை 6:30 மணி ஆகிவிட்டது. இதன் போதே ஏராளமான ரசிகர்களும் தொண்டர்களும் அவருடைய பஸ் நெருங்கிய போது கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்து மூச்சுத் திணறி கிட்டத்தட்ட 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும் இந்தச் சம்பவம் நடைபெற்று சுமார் மூன்று மணி நேரம் கழித்து 'இதயம் நொறுங்கிப் போய் இருக்கின்றேன்' என விஜய் டிவிட் செய்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கரூர் பிரச்சாரத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்துள்ளார் விஜய் . எனினும் தங்களுடைய உறவுகளை இழந்த போதிலும் விஜய் மீது எந்த தப்பும் இல்லை என பலர் போட்டி கொடுப்பது அதிசயமாக பார்க்கப்படுகின்றது.
Listen News!