• Apr 29 2025

அஜித் குமார் பற்றிய சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்த முக்கிய பிரபலம்..! யார் தெரியுமா?

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் பெருமைமிக்க நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், சமீபத்தில் இந்திய அரசால் 'பத்மபூஷன்' விருதினைப் பெற்று கௌரவிக்கப்பட்டார். திரைப்பட உலகிலும், கார் பந்தய உலகிலும் தனது தனித்திறமையால் உயர்ந்துள்ள அஜித் குமாருக்கு, இந்தியா முழுவதும் பல வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.


இதில் மிக முக்கியமான வாழ்த்தாக, ஆந்திராவின் துணை முதல்வரும், பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் வழங்கிய வாழ்த்து மக்கள் மனதில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அஜித் குமாரின் சாதனையைப் பற்றி பவன் கல்யாண், "ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும், இரண்டையும் சமமாக சமாளித்து முன்னேறிய அஜித் குமார், இந்திய சினிமாவின் பெருமைக்குரியவர். அவருக்குப் 'பத்மபூஷன்' விருது வழங்கியது அனைத்து சினிமாப் பிரியர்களுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. அஜித்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்காலத்தில் அவர் மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன்."எனக் கூறியிருந்தார்.

அஜித் 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து பங்கேற்ற கார் பந்தயங்களில், தேசிய மட்டத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளார். அதே சமயம், அவரது திரை உலக பயணமும் உச்சத்துக்கு சென்றிருந்தது. இந்த இரட்டைப் பயணத்தை நேர்த்தியாக கையாள முடிந்தது, அவரின் அபாரமான தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாகும்.

Advertisement

Advertisement