விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் மக்களுக்கு விருப்பமான வகையில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜுன் 29ம் தேதி விஜய் டிவியில் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்டது Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் தொகுத்து வழங்க இந்த ஷோவின் நடுவர்களாக நடிகை ராதா மற்றும் கோபிநாத் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நமக்கு நன்கு பரீட்சயமான பிரபலங்கள் என 12 ஜோடிகள் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதில் சிவகுமார்-மீரா கிருஷ்ணன், பார்த்தசாரதி-தாமரை செல்வி, சமீர்-அஜீபா, கொட்டாச்சி-அஞ்சலி, புவியரசன்-மோகனப்ரியா என 5 பேர் இறுதி நிகழ்ச்சிக்கு தெரிவாகியுள்ளனர்.
Listen News!