• Nov 09 2025

அதிதி சங்கருடன் ஜோடி சேரும் பிரபல இசையமைப்பாளர்... யார் தெரியுமா.?

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட உலகில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நிவாஸ் கே. பிரசன்னா. இவர் பல்வேறு திரைப்படங்களில் தனது இசை மூலம் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். 


இந்நிலையில், நிவாஸ் தனது வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் முடிவை தற்பொழுது எடுத்துள்ளார். அவர் தற்போது ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும் ஹாலிவுட் திரைப்படத்தில் எனவும் கூறப்படுகிறது. 

நிவாஸ் கே. பிரசன்னா இசையில் சிறந்து விளங்கியவர் என்பது புதிய செய்தி அல்ல. ஆனால், அவரது நடிகர் அவதாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, “Jada” படத்தை இயக்கிய இயக்குநர் குமரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த புதிய ஹாலிவுட் படத்தில் நிவாஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.


அத்துடன் இப்படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவின் இளம் நடிகை அதிதி சங்கர் நடிக்கவுள்ளார். அதிதி சங்கர், இயக்குநர் ஷங்கரின் மகளாக இருந்தாலும், தனது முதல் படமான விருமன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருந்தார். அதன் பின், மாவீரன் படத்தில் தனது இயல்பான நடிப்பால் பாராட்டப்பட்டார்.

இப்போது நிவாஸ் கே. பிரசன்னாவுடன் இணைந்து ஹாலிவுட் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பது, அவருடைய கரியரில் பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இவர்களின் ஜோடி திரையில் எப்படி காட்சியளிக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement