தமிழ் சினிமாவில் சமீபகாலமாக புதிய முயற்சிகளுடன் உருவாகும் படங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில், தற்போது கவின், ஆண்ட்ரியா மற்றும் ருஹானி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “மாஸ்க் (MASK)” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத்தை விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். அவரின் கதை சொல்லும் பாணி, புது தலைமுறையை சினிமாவிற்கேற்ற வகையில் கவரும் எனக் கூறப்படுகிறது.
இப்படத்தில் கவின் முக்கிய கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் பல படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானதுடன், இப்போது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று வெளியிடப்பட்ட “மாஸ்க்” திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ட்ரெய்லரில் ஒரு மர்மமான கதைக்களம் மையமாக இருப்பது தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் suspense, thrill, mystery, மற்றும் emotional சிறப்பாக கலந்திருக்கிறது. அத்துடன் இந்த வீடியோ யூடியூபில் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!