• Nov 22 2025

கவின் நடிப்பில் வெளியான கிஸ்...!முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான ஒருவராகத் திகழும் கவின், 'லிப்ட்', 'டாடா', 'ஸ்டார்' ஆகிய வெற்றிப்படங்களுக்கு பிறகு தற்போது 'கிஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடன இயக்குநராக பெயர் எடுத்துள்ள சதீஸ் கிருஷ்ணன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.


ப்ரீத்தி அஸ்ராணி, கவினுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ், ராவு ரமேஷ், தேவயானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஃபாண்டஸி ரொமான்டிக் காமெடி வகை படமாக உருவான 'கிஸ்', செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியாகியதற்குப் பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சிலர் படத்தின் தனித்துவமான கதை சொல்லல் மற்றும் காதல் காட்சிகளை பாராட்டினாலும், மற்றவர்கள் சுருக்கமான திரைக்கதை மற்றும் சூழ்நிலைகளின் ஆழமின்மையை குறை கூறியுள்ளனர்.

இந்நிலையில், 'கிஸ்' திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ. 70 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு சுமாரான ஓப்பனிங் எனக் கருதப்படுகிறது. வருங்கால நாட்களில் ரசிகர்கள் மத்தியில் படம் மேலும் வரவேற்பைப் பெறுமா என்பது காத்திருத்தற்குரியது விடயம்.

Advertisement

Advertisement