• Oct 26 2025

படையாண்ட மாவீரன்' படத்திற்கு எதிராக வழக்கு....!வீரப்பனின் மனைவி குற்றச்சாட்டு....!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

வ. கௌதமன் இயக்கி நடித்துள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படம் இன்று வெளியானது. இதில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், படம் வட தமிழக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்திய 'காடுவெட்டி' குருவின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்தவர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு கோபி ஜெகதீஸ்வரன். தயாரிப்பு: வி கே புரொடக்ஷன்ஸ்.


இந்நிலையில், இந்த படத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பனின் தோற்றம் மற்றும் தனித்துவ அடையாளங்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக அவரது மனைவி முத்துலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வீரப்பனின் தனிப்பட்ட தோற்றங்கள் — செம்மணற் முடி, கொட்டும் மீசை, பைக்குடன் காட்சியளிப்பது போன்றவை — நேரடியாக பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது அவரது தனித்துவ அடையாளங்களை மீறுவதாகவும், அவரது குடும்பத்தின் தனிநபர் உரிமையை பாதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து, "படையாண்ட மாவீரா" திரைப்படம் தயாரித்த வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம், வரும் செப்டம்பர் 26 தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், இது படம் எதிர்கொள்ளும் எதிர்மறை சூழலாக பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement