• Jan 18 2025

எதிர் நீச்சல் சீரியலுக்காக ராமமூர்த்தி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- மாதத்திற்கு இத்தனை லட்சமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் மாரிமுத்து. நெக்கட்டிவ் ரோலாக இருந்தாலும் இதில் இவர் பேசும் இந்தாம்மா ஏய் என்ற வசனம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.

 இதையடுத்து,கடந்த செப்டம்பர் மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு ஒரு நல்ல இடத்தை அடைந்து கனவை தொடும் நேரத்தில் மாரிமுத்து திடீரென மறைந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.


மாரிமுத்துவின் மறைவைத் தொடர்ந்து தற்பொழுது குணசேகரனாக ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.சினிமாவில் வில்லனாக மிரட்டி வரும் இவர் இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து, மாரிமுத்துவின் இடத்தை பூர்த்தி செய்துள்ளார். எதிர்நீச்சல் சீரியலைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

ஆனால்,படங்களில் பெரியதாக கமிட்டாகாமல் சீரியலில் கவனம் செலுத்தி வருகிறாராம் அதற்கு காரணம், எதிர்நீச்சல் தொடரில் மாதத்திற்கு வேல ராமமூர்த்திக்கு 10 லட்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 20 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement