• Jan 19 2025

மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக உதவி செய்யுங்க- நடிகர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கை

stella / 1 year ago

Advertisement

Listen News!


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 4ம் தேதி கனமழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டன. 

தொடர்ச்சியாக 28 மணி நேரங்களுக்கும் அதிகமாக மழை பெய்ததால், சென்னை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.


மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், பால் விநியோகம், ஏடிஎம் சேவைகள் உட்பட அனைத்துவிதமான அத்தியாவசியமான தேவைகள் அனைத்தும் தடைப் பட்டன.

அதேபோல் பொது போக்குவரத்து, ரயில் சேவை உட்பட விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. சென்னை முழுவதும் கடந்த 3 நாட்களாகவே மழையின் தாக்கம் தொடர்கிறது.


இதனால் பிரபலங்கள் பலரும் உதவி தேவைப்படும் மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.


இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். #கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement