தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ‘ஜன நாயகன்’. விஜய்யின் அரசியல் நுழைவுக்கு முன் வெளியாகும் கடைசி திரைப்படம் என்ற காரணத்தால், இப்படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதன்படி, படம் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், வெளியீட்டிற்கு முன் தணிக்கை சான்று (Censor Certificate) வழங்கப்படாத காரணத்தால், கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த திடீர் அறிவிப்பு, விஜய் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

‘ஜன நாயகன்’ படம் அரசியல் மற்றும் சமூக கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தணிக்கை குழு சில காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக, திட்டமிட்ட தேதியில் படம் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால், சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி பதிவுகள் வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானதும், அதில் இடம்பெற்ற பல காட்சிகள் ‘பகவந்த் கேசரி’ படத்துடன் ஒத்துப்போவதாக சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்தது. இதையடுத்து, ‘ஜன நாயகன்’ படம் ‘பகவந்த் கேசரி’யின் ரீமேக்கா என்ற கேள்விகள் எழுந்தது.
இந்த சர்ச்சை குறித்து தற்போது ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “`பகவந்த் கேசரி’ படத்தின் அடிப்படை கருவை மட்டும் வைத்துக்கொண்டு ‘ஜன நாயகன்’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது முழுமையான ரீமேக் அல்ல.” என்று தெளிவாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், சமூக வலைத்தளங்களில் பரவிய “ரீமேக்” சர்ச்சைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும் அவர் பேசும்போது,“நான் எந்த ரீமேக் படத்தையும் எடுக்க மாட்டேன் என்பதில் எப்போதும் உறுதியாக இருந்தேன்.விஜய்யின் கடைசி படம் என்பதால் நான் அவருக்கு பல ஒரிஜினல் ஸ்கிரிப்ட்களை காட்டினேன். அதில் பகவந்த் கேசரி ஸ்கிரிப்ட் தான் அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது.'' என்றும் கூறியிருந்தார்.
Listen News!