தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அதன்போது, ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் திடீரென உயிரிழந்த செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா ஒரு கலை மட்டுமல்ல; உயிரோடும் நேர்மையோடும் பணிபுரியும் தொழில். அத்தகைய தொழிலில் உயிரையே பறிகொடுத்த வேதனையான சம்பவம் இது. இச்சம்பவம் நாகை மாவட்டத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' திரைப்படத்தின் முக்கியமான car stunt sequence-இல் நிகழ்ந்தது.
ஸ்டண்ட் காட்சிக்கான பயிற்சி நடந்தபோது, காரில் இருந்து குதிக்கும் காட்சி நடிப்பதற்காக தயாரான ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ், காரிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, நாகை காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Listen News!