தமிழ் சினிமாவில் பிரமாண்டமான படங்களை இயக்கி, சமூக விழிப்புணர்வுடன் கதைகளை சொல்லும் மாரி செல்வராஜ். இவர் ஏற்கனவே ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ போன்ற படங்களில் சமூக நோக்குடன் கதைகளை உருவாக்கியவர். இப்போது மீண்டும் தனுஷ் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் தனுஷ் உடன் இணைந்து, சமூக வன்முறை, சமூக நீதி, மற்றும் சாதிய அரசியலைக் கொண்ட ஒரு புது படைப்பை உருவாக்க உள்ளார். இவர் ‘அசுரன்’ மற்றும் ‘மாமன்னன்’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து, இந்த கூட்டணியில் உருவாகும் புதிய படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்தப் படம் 1970-களின் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமூக அடுக்குகள், சாதிய வன்முறை, மற்றும் அந்த காலகட்டத்தில் நடந்த போராட்டங்களை திரையில் கொண்டு வருகின்ற வகையில் இந்தப்படம் அமைகின்றது.அத்துடன் தனுஷ், இந்த படத்தில் முன்பு ஒருபோதும் இல்லாத ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
அத்துடன் இந்தப் படம் தனுஷின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் சமூக விழிப்புணர்வுடன் கூடிய படமாக விளங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Listen News!