• Feb 21 2025

சமந்தாவிடம் இன்னும் மாறாத சுட்டித்தனம்.. இணையத்தை கவர்ந்த புதிய போட்டோஸ்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தான் சமந்தா. இவர் கோலிவுட்டில் அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருந்தார். ஆனாலும் ஒரு சில காரணங்களினால் அவருடைய சினிமா வாழ்க்கை ஆட்டம் கண்டது.

இவருடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம், தந்தையின் மரணம் என்பன இவரின் மன நிலையை ரொம்பவும் பாதித்தது. ஆனாலும் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டுள்ளார் நடிகை சமந்தா.


இவர் தற்போது திரைப்படங்களில் பெரிதளவில் நடிக்க விட்டாலும் பொது வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார். மேலும் அடிக்கடி சமூக வலைத்தள பக்கங்களில் தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார். இது சமந்தாவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், சமந்தா சற்று முன் புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் ரொம்பவே சுட்டித்தனமாக காணப்படுகின்றார். இதை பார்த்த ரசிகர்கள் சமந்தா மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியதை நினைத்து தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement