பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், எழிலின் பட வெளியீட்டு விழாவில் எல்லோரும் குடும்பமாக கலந்து கொண்டுள்ளார்கள். அங்கு ராதிகாவும் வருகின்றார். இதை பார்த்த ஈஸ்வரி மீண்டும் ராதிகாவை கோபியுடன் சேர்த்து வைக்க திட்டம் போடுறீயா என பாக்கியாவுக்கு பேசுகிறார்.
ஆனாலும் ராதிகா, நான் எழிலுக்காக தான் வந்தேன் பயப்பட வேண்டாம் உங்களுடைய பிள்ளையுடன் நான் திரும்பவும் சேர மாட்டேன் நாளைக்கு டிவோஸ் கேஸ் இருக்குது என்று சொல்லுகின்றார்.
அதன் பின்பு எழிலை நினைத்து கோபி பெருமைப்படுகின்றார். மேலும் எழிலுடன் தான் ஏற்கனவே செய்த தப்புகளுக்காக மன்னிப்பு கேட்கிறார். ஈஸ்வரியும் படவேலை எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் வீட்டிற்கு வரவேண்டும் குழந்தை பெற்று தரவேண்டும் என்று எழிலுக்கு ஞாபகம் ஊட்டுகின்றார் .
இன்னொரு பக்கம் இனியா தனது காதலரை சந்திக்க காபி ஷாப் போகின்றார். அங்கு இருவரும் பேசிக்கொண்டு உள்ளார்கள். இறுதியில் ராதிகா, பாக்கியா மற்றும் செல்வி ஆகியோரும் இன்னொரு ரெஸ்டாரண்டில் உணவருந்துகின்றார்கள்.
இதன்போது ராதிகா நான் போன பிறகு நீங்க கோபியை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைத்தேன்.. ஆனால் ஏன் அப்படி செய்யவில்லை என்று கேட்கின்றார். அதற்கு செல்வி ஈஸ்வரி அம்மா நிறையவே ட்ரை பண்ணினாங்க.. ஆனால் அக்கா கிட்ட அவங்க பாட்ஷா பழிக்கல. எனக்கும் என் புருஷன் சரியான தொல்லை தாரான்.. கூடிய சீக்கிரம் வேறு கல்யாணம் பண்ணுவேன் என்று சொல்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!