மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித்,திரிஷா மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதில் பல இன்னல்கள் இருந்து வந்துள்ள நிலையில் பொங்கலுக்கு இப் படம் வெளியாகுவதாக படக்குழு அறிவித்திருந்தது இருப்பினும் குறித்த படத்தினை பொங்கல் அன்று வெளியிட முடியவில்லை என லைகா நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் "சில தவிர்க்க முடியாத காரணங்களினால் "விடாமுயற்சி" திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த தகவலினை இயக்குநர் மகிழ் திருமேனி தனது x தள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
— Magizh Thirumeni (@MagizhDiroffl) December 31, 2024
குறித்த பதிவிற்கு ரசிகர்கள் கவலையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!