• Jan 18 2025

முதல் நாளே சிக்ஸர் அடித்தாரா விஜய் சேதுபதி..? எப்படி இருந்தது ஹோஸ்டிங்?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸ் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இம்முறை ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளானமைக்கு முக்கிய காரணமே இதில் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களம் இறங்கி உள்ளமை தான்.

முதல் நாளிலேயே 18 போட்டியாளர்களின் அறிமுகத்துடன் நிறுத்திக் கொண்ட விஜய் சேதுபதி, நேற்றைய தினம் பட்டாசாக வெடித்துள்ளார். அவருடைய பேச்சுக்கு முழு அரங்கமே தமது கைதட்டல்களை தெரிவித்தது. இத்தனை ஆண்டு காலமாக தொகுத்து வழங்கிய உலக நாயகனின் பெயரையே சுக்கு நூறாக உடைத்து விட்டார் என்றே சொல்லலாம்.

தானும் அதிகமாக பேசாமல் போட்டியாளர்களையும் அதிகமாக பேச விடாமல் அவர்களின் குறை நிறைகளை சொல்லி தரமான பதிலடிகளுடன் தனது கெத்தை நிரூபித்துள்ளார் விஜய் சேதுபதி. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.


பிக் பாஸ் வீட்டில் காணப்படும் போட்டியாளர்கள் இடையே தற்போது வாக்குவாதம் கருத்து வேறுபாடு போன்றவை தான் நீண்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டிய விஜய் சேதுபதி, மிக நீண்ட விளக்கத்தையோ கேள்விகளையே  தொடுக்காமல் தன்னுடைய பாணியிலேயே அட்வைஸ் பண்ணி போட்டியாளர்களை அடக்கியுள்ளார்.

விஜய் சேதுபதியின் இந்த எதார்த்தமான பேச்சும் நடவடிக்கையும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதன் காரணத்தினால் பிக் பாஸ் எட்டாவது சீசன் விஜய் சேதுபதிக்காகவே டிஆர்பி ரேட்டிங்கில் எகிரும் என ரசிகர்கள் தமது கருத்துக்களை சமூக வலைதள பக்கங்களில் முன்வைத்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement