• Oct 16 2024

நான் ரொம்ப அதிஷ்டசாலி.. வெற்றி வசந்த் கொடுத்த சர்ப்ரைஸில் மனமுறுகிய வைஷு! க்யூட் வீடியோ

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் காணப்படுகிறது. இதில் நாயகனாக நடிக்கும் வெற்றி வசந்த் விஜய் சேதுபதி போல இருப்பதாக அவருடைய ரசிகர்கள்  கொண்டாடி வருகின்றார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு விரைவில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொல்லப் போகிறேன் என்று ஒரு போஸ்டை பகிர்ந்திருந்தார் வெற்றி வசந்த். இதை பார்த்த ரசிகர்கள் வெற்றி வசந்த் புது திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளாரா? அல்லது யாரையும் திருமணம் செய்து கொள்ளப் போகின்றாரா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அதற்கு பதில் அளிக்காத வெற்றி வசந்த், சமீபத்தில் தனது காதலியை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.

அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொன்னி சீரியலில் பொன்னி கேரக்டரில் நடிக்கும் வைஷ்ணவி தான் அவருடைய காதலி என்றும் சீக்கிரமே எங்கேஜ்மென்ட் செய்ய உள்ளதாகவும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார். இதனால் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.


இந்த நிலையில், தற்போது வெற்றி வசந்த் தனது காதலி வைஷ்ணவியின்  பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். வைஷ்ணவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ஆட்டம் பாட்டம் என அவரை மகிழ்வித்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சின்னத்திரையில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் காதல் திருமணம் செய்து கொள்ளும் வகையில் அந்த லிஸ்டில் தற்போது வெற்றி வசந்தும் வைஷ்ணவியும் இணைந்துள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் என்றும் சிறப்பாக வாழ தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement