• Sep 05 2026

பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தும்… ‘இம்மார்ட்டல்’ படத்திற்கு இவ்வளவு தான் வசூலா.?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

ஜிவி பிரகாஷ் குமார், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இப்படத்தை இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு முதல் நாளிலேயே ரசிகர்களிடம் பாசிட்டிவான வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, படத்தின் கதைக்களம் மற்றும் நடிகர்களின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன. இதனால் ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் ஜிவி பிரகாஷ் குமாருக்கு முக்கியமான வெற்றிப் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


இந்நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் சுமார் ரூ.95 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெரிய நட்சத்திரப் படங்களுக்கு மத்தியில் வெளியான நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் டீசன்ட்டான நிலையில் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், இன்று மற்றும் நாளை விடுமுறை தினங்கள் என்பதால் திரையரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதோடு, படத்திற்கு கிடைத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்களும் வசூலுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் ‘இம்மார்ட்டல்’ படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement