• Sep 27 2026

நாளை அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.. ஒரே நேரத்தில் வரும் இரண்டு முக்கிய அப்டேட்கள்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

அஜித்தின் சர்வதேச கார் பந்தய பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ ஆவணப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, கார் பந்தய வீரராகவும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அஜித், ‘அஜித்குமார் ரேசிங்’ அணியின் மூலம் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், அஜித்தின் ரேசிங் அனுபவங்களை பதிவு செய்யும் வகையில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். துபாய், அபுதாபி உள்ளிட்ட பகுதிகளிலும், ஐரோப்பிய கார் பந்தயத் தொடர்களிலும் அஜித் பங்கேற்ற முக்கிய தருணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.


மேலும், இத்தாலியின் வெனிஸ் நகரில் அஜித்துக்கு வழங்கப்பட்ட ‘ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது’ உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளும் ஆவணப்படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தின் சிறப்பு டிரெய்லர் நாளை மாலை 6.40 மணிக்கு வெளியாகிறது. 3 நிமிடங்களுக்கு மேல் நீளமுள்ள இந்த டிரெய்லருக்கு U/A 13 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்வு செய்யப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.

மறுபுறம், ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ள ‘டேர்டெவில்’ படமும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement