தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ‘பராசக்தி’. படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம், திரையரங்குகளில் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே வசூல் ரீதியாக புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சமூக அக்கறை, அரசியல் பின்னணி மற்றும் உணர்ச்சிபூர்வமான கதை அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பராசக்தி’, ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் காணப்படும் புதிய பரிமாணம், இப்படத்தின் முக்கிய பலமாக பேசப்பட்டு வருகிறது.

‘பராசக்தி’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு நடிகருக்கும் கதையில் வலுவான பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், படம் முழுவதும் அனைவரின் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் தரும் வகையில் பசில் ஜோசப் மற்றும் ராணா டகுபதி ஆகியோர் கேமியோ ரோலில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக தோன்றியுள்ளனர். குறிப்பாக ராணா டகுபதியின் தோற்றம், திரையரங்குகளில் பெரும் விசில் சத்தத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் வசூல் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, இப்படம் வெளியான 2 நாட்களில் உலகளவில் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Listen News!