கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிர் இழந்தவர்களுக்கும் தன்னால் இயன்ற நஷ்ட உதவிய வழங்கினார் விஜய்.
இது அவருடைய அரசியல் வாழ்க்கையில் கருப்பு புள்ளியாக காணப்பட்டபோதும் மக்கள் அனைவரும் விஜய்க்கு சார்பாக தான் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். இதில் அவருடைய பிழை எதுவும் இல்லை எதிர்க்கட்சியினரின் சதி தான் என நம்பினர்.
அதன்பின் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருவதோடு இதில் பாதுகாப்பு அணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள், டாக்டர்கள், இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டவர்கள் என பலரிடமும் சிபிஐ குழுவினர் விசாரணைகளை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து இன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில், விசாரணைக்காக இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ளார். அதற்காக சென்னையில் இருந்து இன்று காலை 7 மணிக்கு தனி விமான மூலம் டெல்லி சென்றுள்ளார்.
விஜய் குற்றம் செய்த நபர் இல்லை, குற்றம் நடந்த விதம், குற்றம் தொடர்பான விஷயங்கள் அவருக்கு தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் விஜயின் சினிமா கேரியரில் இறுதி படம் ஜனநாயகன் படமும் சென்சார் பிரச்சனையில் ரிலீஸுக்கு தள்ளிப் போய் உள்ளது.
எனவே ஒரு மனிதனுக்கு சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் தான் வரும் என அவருடைய ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது .
Listen News!