• Jan 18 2025

சூப்பர் ஸ்டாருக்காக அஜித் இப்படியெல்லாம் செய்தாரா? நம்பவே முடியலையே..!

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் எதிர்வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இன்றைய தினம் இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. இதன் காரணமாக ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

அதே சமயம் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை அப்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகளும் சிகிச்சைகளும் செய்யப்பட்டன. இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்பினார் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் வேட்டையன்  திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது ரசிகர்களுக்கு வேதனை ஏற்படுத்தி உள்ளது.


வேட்டையன் படத்தை முடித்த கையோடு கூலி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார் ரஜினி. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌமியன் சாஹிர், ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதால் இந்த படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் அஜித் அவருக்கு வீடியோ கால் மூலம் நலம் விசாரித்துள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது. மேலும் இளையதளபதி விஜயும் சூப்பர் ஸ்டார் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement